நடிகர் விஜயின் இயல்பு குறித்து திரைத்துறை பிரபலங்கள் பலரும் புகழ்ந்து கேள்விப்பட்டிருப்போம். அப்படிப்பட்ட புகழ்ச்சிகளுக்கிடையே சன் மியூசிக் நிகழ்ச்சி தொகுப்பாளரான விஜே அஞ்சனாவுடையதும் இணைந்திருக்கிறது.
விஜய் குறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசி இருந்த அவர், 'எனது திருமணத்திற்கு நெருங்கிய நண்பர்களை மட்டும் அழைப்பதாக இருந்த நிலையில், மிகப்பெரும் விஜய் ரசிகையாக நான் நடிகர் விஜயை அழைக்க வேண்டும் என ஒற்றை காலில் நின்றேன்.
இதனால் என் கணவரும், நடிகர் விஜயின் பிஆர்ஓ வழியாக தொடர்பு கொண்டு, திருமண அழைப்பிதழ் வழங்க முயற்சித்த போது, அழைப்பிதழ் எல்லாம் வேண்டாம் நான் விஜய் அவர்களிடம் தெரிவித்து விடுகிறேன் என்றார்.
என்றாலும் அழைப்பிதழே வழங்க வரவேண்டாம் என்கிறார்கள் திருமணத்திற்கா வரப்போகிறார் என நம்பிக்கையற்று இருந்தேன். ஆனால் முன்னறிவிப்புகள் ஏதுமின்றி திருமண வரவேற்பின் போது எந்த வித பந்தாவும் இன்றி எளிமையான காரில், உள்ளே வந்துவிட்டார்.
இதனை கண்டு எங்களுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை, அதன் பின்னர் அனைவரிடமும் சகஜமாக பேசி குழந்தைகள் உடன் செல்பி எடுத்துக்கொண்டதெல்லாம் மறக்க முடியாத தருணம்' என புகழ்ந்து தள்ளி இருந்தார்.
Social Plugin