Ad Code

Responsive Advertisement

'ஆண்' கும்புடுறவானா இருக்கணும், கூப்டுறவனா இருக்க கூடாது' - விஜய் பட பிரபலத்தின் செருப்படி பதிவு


நயன்தாராவை நடிகர் ராதாரவி கொச்சையாக பேசிய சம்பவம், கடும் கண்டனத்திற்கு ஆளானது. இதற்கு திரையுலகினர், ரசிகர்கள், அரசியல்வாதிகள் என பலரும் கண்டனங்களை தெரிவித்திருந்த நிலையில், இது குறித்து சமீபத்தில் பிரபலம் ஒருவர் பகிர்ந்த பதிவு ரசிகர்களை கவர்ந்துள்ளது.

மெர்சல், சர்கார் போன்ற திரைப்படங்களில் தனது அதிர வைக்கும் பாடல் வரிகளின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர், பாடலாசிரியர் விவேக். இவர் சமீபத்தில் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், ராதாரவி சம்பவம் குறித்து தனது மனைவி தெரிவித்த கருத்தை பதிவிட்டு இருந்தார்.

அதில், 'பொண்ணுன்னா கும்புடுற மாதிரி இருக்கணும் கூப்புடுற மாதிரி இருக்க கூடாது’ என ராதாரவி கூறி இருப்பதாக தன் மனைவியிடம் தெரிவிக்க, அவர், 'ஆண் என்றால் கும்புடுறவனா இருக்கணும் கூப்புடுறவனா இருக்க கூடாது’ என பதிலளித்த செமத்தியான உரையாடல் குறித்து தெரிவித்திருந்த நிலையில், 'உண்மையிலேயே இதுதான் செருப்படி பதிவு' என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.