பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம், விளம்பர மாடலாக இருந்து நாயகியாக ப்ரமோட் ஆகி இருப்பவர் ரைசா. இவர், தான் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்த ஆசைப்படும் இருவர் குறித்து மனம் திறந்திருக்கிறார்.
இவரது நடிப்பில் வெளியான 'பியார் பிரேமா காதல்' திரைப்படத்தினை தொடர்ந்து, G.V. பிரகாசுக்கு ஜோடியாக ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து மாடர்னான பெண் வேடங்களில் நடிக்க வாய்ப்புகளை பெற்றுவரும், இவர் திருமணம் குறித்த கேள்விக்கு பதில் அளித்தார்.
'திரைத்துறையில் உள்ள நடிகர்களில் யாரை நீங்கள் திருமணம் செய்து கொள்வீர்கள்?' என்ற குறிப்பிட்ட கேள்விக்கு, 'தமிழில் நடிகர் விஜயையும், தெலுங்கில் நடிகர் விஜய் தேவரகொண்டாவையும் திருமணம் செய்து கொள்ள விருப்பம்' என ஒன்றிற்கு இரண்டு நடிகர்களின் பெயரை சொல்லிஇருக்கிறார்.
Social Plugin