சின்னத்திரையில் ஜொலிப்பவர்கள் வெள்ளித்திரை பக்கம் தலைவைத்து கூட படுக்கமுடியாது என்றிருந்த காலம் போய், சீரியல் நாயகிகள் முதல் செய்தி வாசிப்பாளர்கள் வரை திரைத்துறையில் நாயகியாக நடிக்க துவங்கி விட்டனர்.
சின்னத்திரை பிரபலங்களை ஹீரோ, ஹீரோயினாக ரசிகர்களும் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கும் நிலையில், அவர்களும் திரைத்துறை வாய்ப்புக்காக தங்களால் முடிந்த காரியங்களை செய்துகொண்டுதான் இருக்கின்றனர்.
முன்னணி நட்சத்திரங்களை புகழ்ந்து பேசுவது, கலாய்த்து சர்ச்சையில் சிக்குவது, கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிடுவது என ரசிகர்களை சென்றடைய ஏகப்பட்ட வழிகளை சமூக வலைத்தளங்களும் இப்பொழுது வழங்கியுள்ளது.
இந்நிலையில், பிரபல விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிபுரிந்து வரும், ரம்யா சுப்பிரமணியனும் இத்தகைய முயற்சியில் இறங்கி இருக்கிறார்.
மாடர்ன், ட்ரெடிஷன் உடைகளில் தோன்றுவது, உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள் வெளியிடுவது, நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களையும் பதிவிடுவது என சமூக வலைத்தளங்களில் நாயகிகளுக்கே டஃப் கொடுத்து வரும் இவரை விரைவில் நாயகியாக பார்த்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
Social Plugin