தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்களில் தளபதி விஜயும் ஒருவர். என்ன நடந்தாலும் விட்டுக்கொடுக்காமல் இவரது படங்களை வெற்றி பெற செய்யும் பெருமையும் இந்த ரசிகர்களையே சாரும்.
இப்படி பெரும்பாலான நடிகர்களை போல தனக்கு பக்க பலமாக இருக்கும் ரசிகர்களை ஒருபோதும் விட்டுக்கொடுக்காதவர் விஜய். தான் எவரிடம் எந்த ஒரு பேச்சுவார்த்தையில் இருந்தாலும், தன் ரசிகர்களை புகழ மறவாத நடிகர் விஜய், அவர்கள் மீது கொண்டுள்ள அன்பு எவ்வளவு பெரிது என்பதை வெளிக்காட்டி இருக்கிறது சமீபத்திய காணொளி ஒன்று.
குறிப்பிட்ட காணொளியில், தளபதி 63 படப்பிடிப்பிற்கு தனது காரில் செல்கிறார் விஜய். அவரது வருகையை தெரிந்து கொண்ட ரசிகர்கள் சாலையோரம் குவிந்து நின்று ஆராவாரம் செய்ய, சட்டென்று ஓடும் காரில் கதவை திறந்து, எழுந்து நின்று, புண் சிரிப்புடன் கையசைத்து செல்கிறார்.
Never Disappoints his fans ❤ #தளபதி #விஜய் ❤️ #Thalapathy63 @Thalapathy63Off pic.twitter.com/DK8eX1S4KV— #Thalapathy63 (@Thalapathy63Off) March 6, 2019
இப்படிப்பட்ட ரிஸ்க்கினை அவர் எடுத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றாலும், 'ரசிகர்களுக்காக அவர் செய்த இந்த காரியம் போதாதா? தன் ரசிகர்கள் மீது அவர் கொண்டுள்ள அன்பை நிரூபிக்க'.
தொடர்புடைய செய்திகள்
ஒரே வார்த்தையில் அஜித்தை அசிங்கப்படுத்திய நடிகை... கொலைவெறியில் ரசிகர்கள்
Social Plugin