Ad Code

Responsive Advertisement

ஒரு விரல் புரட்சி நாயகனே இப்படி பண்ணலாமா..? புலம்பும் தேர்தல் ஆணையம்


'சர்கார்' திரைப்படத்தில் 'வாக்களிப்பதற்கான அத்யாவசியத்தை அதிரடியாக எடுத்துரைத்த நீங்களே இப்படி செய்யலாமா?' என தேர்தல் ஆணையத்தை புலம்ப விட்டிருக்கிறார் நடிகர் விஜய்.

லோக்சபா தேர்தல் நாடுமுழுவதும் நடைபெற உள்ள நிலையில், வாக்களிப்பதற்கான அத்யாவஸ்யத்தையும், ஓட்டிற்கு காசு வாங்குவது தவறு என்பதை வலியுறுத்தவும் திரை பிரபலங்களை வைத்து விளம்பரம் செய்து வருகிறது தேர்தல் ஆணையம்.

அப்படியொரு விளம்பரத்தில் நடிகர் விஜயை நடிக்க அழைத்தபோது, வெளிநாட்டில் இருப்பதாக கூறி தட்டி கழித்துள்ள சம்பவமும் இப்பொழுது நிகழ்ந்தேறியுள்ளது.

இந்நிலையில், மக்கள் மற்றும் சமூக நலனில் அக்கறை கொண்ட நடிகர் விஜய், இப்படியொரு நல்ல காரியத்தினை செய்ய மறுத்ததற்கு, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் பிடிக்காததே காரணம் எனவும் கிசுகிசுக்கின்றன கோலிவுட் வட்டாரங்கள்.