படப்பிடிப்பில் தன்னை காணவந்த ரசிகர்களை, வேலி சரியும் தருணத்தில் தாங்கி பிடித்து காப்பாற்றினார் நடிகர் விஜய். வீடியோவாக வெளியான இந்த சம்பவத்திற்கே அவரை தலையில் தூக்கி கொண்டாட துவங்கிவிட்டனர் ரசிகர்கள்.
ஆனால் அதனை தொடர்ந்து நடந்த மற்றொரு சுவாரஸ்ய சம்பவம் குறித்து அறிந்தால், ரசிகர்களின் மன நிலை எப்படி இருக்கும் என்பதனையும் எங்களால் கணிக்க முடிகிறது.
குறிப்பிட்ட சம்பவத்திற்கு பின்னர் படப்பிடிப்பு பகுதியில் என்ன நடந்தது என்பது குறித்த தகவல்கள் தற்பொழுது வெளிவந்துள்ளது. அதன்படி, வேலி சரிந்தது, காப்பாற்றினோம் என்று சென்றுவிடாமல்,
நடிகர் விஜய், அதில் ரசிகர்கள் எவரேனும் காயப்பட்டு உள்ளனரா? அப்படி காயப்பட்டு இருந்தால் மருத்துவமனையில் அனுமதித்து போதிய சிகிச்சை வழங்குமாறு உடனிருந்த உதவியாளர்களுக்கு கட்டளை இட்டும் இருந்தாராம்.
Also read | உயிரையும் பணையம் வைத்த விஜய்..!!! ஆனால் அஜித்..??? கிளம்பிய சர்ச்சை
இப்படி 'எனக்கு எல்லாமே என் ரசிகர்கள் தான்' என்று வாய்பேச்சில் மட்டுமில்லாமல், அவர்களது நலனிலும் அக்கறை காட்டிய விஜயின் நடவடிக்கைகள் கோலிவுட் திரையுலகில் கொண்டாடப்பட்டு வருகிறது.
Social Plugin