நடிகர் விஜய் அரசியலில் களம்காண இருப்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், அதற்கான நடவடிக்கைகள் ரகசியமாக நடைபெற்று வருவதும் நாம் அறிந்ததே.
இப்படி இருக்க, அரசியலில் குதிக்கும் முன்னரே முன்னணி அரசியல் கட்சி ஒன்றுடன் நடிகர் விஜயின் மக்கள் இயக்கம் போட்டி இடும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
முன்னதாக விஜய் நடித்து வெளிவந்த சர்கார் திரைப்படத்தில், ஆளும் கட்சியான 'அதிமுக' கடுமையாக விமர்சிக்கப்பட்டு இருந்தது. இதனால் எக்கச்சக்க பிரச்சனைகளை அத்திரைப்படம் சந்தித்து இருந்தாலும், ரசிகர்கள் விடுவதாக இல்லை.
Also Read | 'ஃபேக் ஐடி, கெட்ட வார்த்தை' அப்போ இவர் ரசிகர் தான்.... சீண்டும் கஸ்தூரி
சமீபத்தில் கூட, சாலையில் வரிசையாக பறக்கவிடப்பட்டது இருந்த 'அதிமுக' கட்சியின் கொடிகளுக்கு இணையாக, விஜயின் மக்கள் இயக்க கொடிகளை பறக்கவிட்டிருக்கின்றனர் விஜய் ரசிகர்கள்.
இதனை சமூக வலைத்தளங்களில், 'எதிர்க்க யவரும் இல்லை என்கிற தைரியம் தான் ஜனநாயகத்தோட முதல் ஆபத்து..' எனும் சர்கார் பட வசனத்தோடு பகிர, போட்டி போட்டு பகிர்ந்து வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.
#எதிர்க்க யவரும் இல்லை என்கிற தைரியம் தான் ஜனநாயகத்தோட முதல் ஆபத்து..— Chillax Praveen (@Vj_Praveen31) March 17, 2019
☝️ #புரட்சி_ஆரம்பம் #எட்ரா_உன்_ஓட்டைர்ஸ்_ஐடிய.... pic.twitter.com/jXVFUu3PuR
Social Plugin