Ad Code

Responsive Advertisement

பதில் இருக்கா 'அதிமுக'..? போஸ்டர் ஒட்டி கேள்வி கேட்ட விஜய் ரசிகர்கள்!!!


அதிமுக அரசியல் கட்சிக்கும், விஜய் ரசிகர்களுக்கும் தலைவா பட பிரச்சனையில் இருந்தே ஏக பொருத்தம். விஜயின் ஒவ்வொரு திரைப்படத்திலும் அக்கட்சியினை விமர்சிப்பதும், பதிலுக்கு ரிலீஸின் போது அவர்கள், விஜய் படங்களுக்கு நெருக்கடி கொடுப்பதும் என தொடர்கதையாகி இருக்கிறது பஞ்சாயத்துகள்.

இப்படி இருக்க வருகிற லோக்சபா தேர்தலில் அக்கட்சியினை தோற்கடிக்க, எதிர்க்கட்சியான 'திமுக' வை விட தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.

அக்கட்சி கொடி பறக்கும் இடங்களில் போட்டிக்கு, விஜய் மக்கள் இயக்கம் கொடியினை பறக்க விடுவது, கடுமையான விமர்சனங்களுடன் போஸ்டர் ஓட்டுவது என கைக்காசை போட்டு களத்தில் இறங்கி இருக்கும் ரசிகர்கள், சமீபத்தில் ஒட்டிய போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

குறிப்பிட்ட போஸ்டரில், அம்மா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்ததற்கும் இறந்ததற்கும் ஆதாரம் எங்கே?, ஒரு ரூபாய் இட்லி ஒரு கோடி ரூபாய் கணக்கு காட்டபட்டது எப்படி?, சர்கார் புகைப்பிடிப்பு காட்சிக்கு போராட்டம் செய்த நீங்கள், குட்கா வழக்கில் சிக்கிய அமைச்சருடன் கூட்டணி வைத்தது ஏன்? என அதிரடியான கேள்விகளையும் விஜய் ரசிகர்கள் எழுப்பி இருந்தனர்.