தமிழகம் மட்டுமல்லாது கேரளாவிலும் நடிகர் விஜய்க்கு தீவிரமான ரசிகர் பட்டாளம் உள்ளது. இதற்கு அம்மாநில நடிகர்களுக்கு இணையாக நடிகர் விஜயின் படங்களும் வசூலை குவிப்பதே சான்று.
இப்படி இருக்க ஒரு நடிகராக மட்டுமல்லாது, அதையும் தாண்டி கடவுளுக்கு இணையாக விஜய் கேரள ரசிகர்களால் கொண்டாடப்படுவதாக ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.
புகைப்படங்கள் விற்கும் தெருவோர கடையில் எடுக்கப்பட்ட குறிப்பிட்ட புகைப்படம் ஒன்றில், கடவுளின் படங்களுக்கு இடையே நடிகர் விஜயின் மெர்சல் திரைப்பட புகைப்படமும் வைக்கப்பட்டுள்ளது.
கேரளாவின் முன்னனி நடிகர்களின் படங்கள் கூட இடம்பெறாத அந்த தொகுப்பில், கடவுள்களுக்கு இடையே நடிகர் விஜயின் புகைப்படம் இடம்பெற்றிருப்பது, கேரள ரசிகர்களுக்கிடையே அவருக்கு இருக்கும் மவுசை காட்டுவதாக ரசிகர்கள் அந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.
Clicked at the biggest Festival in #Kollam, #Kerala.😊#Thalapathy Vijay The Only Celebrity among all the Gods 🙌— Kollam Nanbans (@KollamNanbans) March 26, 2019
The adopted son of Kerala 😘#Mersal #Thalapathy63 pic.twitter.com/Lc0yGtQKbV
Social Plugin