தூம், மொஹாபாட்டீன் ஆகிய திரைப்படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமானவர் உதய் சோப்ரா.
இவரது சமீபத்திய சமூகவலைத்தள பதிவு ரசிகர்களையும் திரைத்துறையினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. தற்பொழுது திரைத்துறையில் தொடர்ந்து நடிக்கவில்லை என்றாலும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து செயல்பட்டு வரும் இவர்,
சமீபத்தில், 'கடந்த சில மணிநேரங்களாக எனது ட்விட்டர் கணக்கை முடக்கி இருந்தேன். மரணத்தை நெருங்கிவிட்டதை போல உணர்ந்தேன். தற்கொலை செய்து கொள்வதும் ஒரு நல்ல முடிவு தான் என எண்ணுகிறன். விரைவில் அதனை நிரந்தரமாக்குவேன்' என பதிவிட்டு பரபரப்பை கிளப்பி இருந்தார்.
இதனால் பதறிப்போன ரசிகர்கள் பதற்றத்துடன் நீங்கள் நலமா என கேள்வி எழுப்ப, 'உண்மையை சொல்ல வேண்டுமானால் நான் நலமாக இல்லை' என பதிலளித்து மேலும் பரபரப்பை கூட்டி இருந்தார்.
மேலும் இந்த சர்ச்சை பதிவுகள் குறித்து அண்மையில் பதில் அளித்திருந்த நடிகர், எனது சமீபத்திய பதிவுகள் உங்களை கவலை கொள்ள வைத்திருப்பதை அறிந்து வருந்துகிறேன். உண்மையிலேயே அவை விளையாட்டாக நகைச்சுவை உணர்வோடு பகிரப்பட்ட ஒன்று, தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. உங்களின் அக்கறைக்கு நன்றி' என்றிருந்தார்.
Social Plugin