Ad Code

Responsive Advertisement

100 திமிங்கலங்களின் உயிரை காப்பாற்றிய டைட்டானிக் நாயகன்


டைட்டானிக் திரைப்படத்தில் நடித்து உலக பிரபலம் அடைந்தவர், லியானார்டோ டி கேப்ரியோ. ஆஸ்கார் வென்றவரான இவர் 100க்கும் மேலான திமிங்கலங்களை மீட்க காரணமாக அமைந்து பலரது பாராட்டுகளை பெற்று வருகிறார்.

உலகம் முழுவதும் அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு இன்று வரை பல்வேறு உயிரினங்கள் ஆராய்ச்சி பொருளாக உபயோகிக்கப்பட்டு வருகின்றன. அப்படி ரஸ்யாவில் 100க்கும் மேலான பல்வேறு வகை அறிய திமிங்கலங்கள் உபயோகிப்பட்டு வந்தது.

இதனை பற்றி அறிந்த, டைட்டானிக் நாயகன் அவற்றை விடுவிக்க கோரி சமூக வலைத்தளத்தில் கோரிக்கை விடுத்தார். இவரது இந்த பதிவு பல்வேறு சமூக ஆர்வலர்கள், ரசிகர்களையும் இது குறித்து அதிக அளவில் பேசப்பட செய்தது.

இதனால், ரஸ்யாவின், பிரைமோர்ஸ்கி எனும் இடத்தில் அடைத்து வைக்கப்பட்டு இருந்து திமிங்கலங்களை விடுவிக்குமாறு, அந்நாட்டு அதிபர் புதின் உத்தரவிட, திமிங்கலங்கள் கடலுக்குள் விடுவிக்கப்பட்டன.