Ad Code

Responsive Advertisement

படப்பிடிப்பே முடியல.. ஆனாலும் விஸ்வாசத்தை பின்னுக்கு தள்ளிய 'தளபதி 63'


அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 63 திரைப்படத்தினை வாங்குவதற்கு, கோலிவுட் வட்டாரத்தில் கடும் போட்டா போட்டி நிலவி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜயின் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்க வரவேற்பு உள்ளது. அவரது திரைப்படங்கள் குறைந்த பட்சம் 100 கோடி ரூபாயை வசூல் செய்துவிடும் நிலையில், 'தளபதி 63' படத்தின் தமிழக விநியோக உரிமை விற்பனை குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

முன்னதாக விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படம் 50 கோடி ரூபாய்க்கும், சர்க்கார் திரைப்படம் 60 கோடி ரூபாய்க்கும் தமிழகத்தில் விநியோகம் செய்யப்பட்டு இருந்தது.

தற்பொழுது, 'தளபதி 63' திரைப்படத்தின் உரிமையானது 70 கோடி ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. இந்த விலை கொடுத்து வாங்க, விஸ்வாசம் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான KJR ஸ்டூடியோஸ் முழுவீச்சில் களம் இறங்கி இருக்கிறது.

இதே நிறுவனம், மெகா ஹிட் திரைப்படமான விஸ்வாசத்தின் தமிழக விநியோக உரிமையை 46.5 கோடிக்கு விற்பனை செய்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அஜித் இப்படி நம்ப வச்சி ஏமாத்திட்டாரே..? புலம்பும் இயக்குனர்