Ad Code

Responsive Advertisement

மீண்டும் 'விஜய் vs பாக்யராஜ்'!!! வீதிக்கு வந்த 'தளபதி 63' பஞ்சாயத்து


சர்கார் திரைப்பட கதை தன்னுடையது என வருண் ராஜேந்திரன் என்பவர் அளித்த புகாரை அடுத்து, நியாயத்தின் பக்கம் நின்று நீதி கிடைக்க செய்தவர் எழுத்தாளர் சங்க தலைவரான பாக்யராஜ்.

இதனால் நெருங்கிய நண்பரான விஜயின் படத்தை எதிர்க்க வேண்டிய சங்கடம் ஒருபுறம் இருக்க, அவரது ரசிகர்களின் கடுமையான விமர்சனத்திற்கும் ஆளானார். இதற்கிடையே எழுத்தாளர் சங்கத்திலேயே நிகழ்ந்த உள்பூசல்கள் வேறு. 

இந்த விவகாரத்தில் என்னதான் தன் தரப்புக்கு வெற்றி கிடைத்தாலும், நொந்து போய் விட்டார் மனிதர். இந்நிலையில் 'மறுபடியும் முதல்ல இருந்தா?' என பாக்யராஜை அதிர்ச்சியடைய வைக்கும் விதத்தில், அவரது பார்வைக்கு வந்திருக்கிறது விஜயின் அடுத்த படமான 'தளபதி 63'ன் கதை திருட்டு விவகாரம்.


K.P. செல்வா எனும் உதவி இயக்குனர், அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் 'தளபதி 63' திரைப்படத்தின் கதை தன்னுடையது என சில மாதங்களுக்கு முன்னதாகா எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்திருக்கிறார்.

நாயகிக்கான முக்கியத்துவத்தை நாயகியாக மாற்றி இருந்ததை தவிர ஒரு வித்தியாசமும் இல்லாமல், இவரது கதையும் உருவாகி இருந்ததை கண்டு அதிர்ந்த எழுத்தாளர் சங்கம், பிரச்சனையை தட்டிக்கழிக்கும் விதத்தில், 'நீங்கள் உறுப்பினராகி 6 மாதங்கள் கழித்துதான் புகார் அளிக்க முடியும்' என இயக்குனரை அலைக்கழித்து உள்ளது.

என்றாலும் மனம் தளராத குறிப்பிட்ட இயக்குனர், உறுப்பினராகி 6 மாத காலம் ஆகிவிட்ட நிலையில் மீண்டும்  புகாரை அளிக்க, என்ன செய்வதென்று திகைத்து நிற்கிறது பாக்யராஜ் தலைமையிலான எழுத்தாளர் சங்கம் அணி.

இந்நிலையில், இம்முறையும் எழுத்தாளர் சங்கம் சரியான நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் இப்பிரச்சனையை நீதிமன்றத்தில் சந்திக்க தயாராக இருக்கிறாராம் K.P. செல்வா.