Ad Code

Responsive Advertisement

'தளபதி 63' படப்பிடிப்பில் அசம்பாவிதம்... விஜய் எடுத்த அதிரடி நடவடிக்கை


தளபதி 63 திரைப்படத்தின் படப்பிடிப்பு பகுதி புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி வந்த பட்சத்தில் நடிகர் விஜய் எடுத்த அதிரடி நடவடிக்கைகோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் திரைப்படம் தளபதி 63. இந்த வருட தீபாவளிக்கு இத்திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், படப்பிடிப்புகள் சென்னையை ஒட்டியுள்ள பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் முந்தைய படங்கள் போல, படப்பிடிப்பு புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் படப்பிடிப்பு பகுதியில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

Also Read | 'IPL' வந்துடுச்சி 'காவிரி போராட்டம்' நடத்தலையா..? அரசியல் கட்சிகளை உசுப்பேற்றும் கஸ்தூரி 

இந்த பாதுகாப்பை மீறியும் ஒரு சில புகைப்படங்கள் வெளியாகி இருந்த நிலையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்களே புகைப்படம் எடுத்து வெளியிட்டு வந்ததும் தெரியவந்தது.

இதனால் கோபமடைந்த நடிகர் விஜய்,  குறிப்பிட்ட பாதுகாப்பு குழுவை மொத்தமாக நீக்கி விட்டு, புதிய பாதுகாவலர்களை நியமிக்க கோரி உத்தரவிட்டிருக்கிறாராம்.