அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி '63' திரைப்பட கதைக்கரு, படப்பிடிப்புகள் துவங்குவதற்கு முன்னதாகவே வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் ரகசியமாக காக்கப்பட்டு வந்த, இத்திரைப்படத்தின் முழுக்கதையும் கசிந்து படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் விஜய் போன்ற முன்னணி நாயகர்களின் படக்கதைகள், டீசர், ட்ரைலர் என இணையத்தில் அனுமதியின்றி வெளியாவது தொடர் கதையாகியுள்ளது.
இதனை தடுக்க திரைத்துறையினர் போராடிவரும் நிலையில், தளபதி 63 திரைப்படம், நடிகர் கதிரை மையப்படுத்தி உருவாகிவரும் தகவலும் கசிந்துள்ளது.
ஏற்கனவே படப்பிடிப்பு பகுதி புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வந்ததாக, பாதுகாவலர்கள் சிலர் படக்குழுவில் இருந்து நீக்கப்பட்டு இருந்தனர். இப்படி இருக்க ரசிகர்களின் சுவாரஸ்யத்தை குறைக்கும் படி, முழு கதையையும் வெளியிட்டது யார் என படக்குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Social Plugin