Ad Code

Responsive Advertisement

வசமாக சிக்கிய நித்யா...! தாடி பாலாஜி வெளியிட்ட முக்கிய ஆடியோ ஆதாரம்


நடிகர் தாடி பாலாஜி, அவரது மனைவி நித்யா இடையிலான, குடும்ப பிரச்சனை ஒட்டுமொத்த தமிழகமும் அறிந்த ஒன்று. பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் இவர்கள் இருவரும் கலந்து கொள்ள, நடிகர் கமலின் மூலம் சமரசமும் செய்து வைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து இவர்களைப் பற்றி எந்தவித செய்திகளும் வெளிவராது இருந்து வந்த நிலையில், தாடி பாலாஜி தன்னை துன்புறுத்துவதாக விவாகரத்து கோரி மீண்டும் சர்ச்சையை கிளப்பினார் நித்யா.

நித்யாவின் இந்த குற்றச்சாட்டிற்கு விளக்கம் அளிக்கும் விதத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த தாடி பாலாஜி, நித்யாவின் புகார்களுக்கு எதிரான பல ஆதாரங்களை சமர்ப்பித்தார்.


அதில், நித்யாவுடன் தொடர்பில் இருந்ததாக பாலாஜி குற்றம் சாட்டும் மனோஜ் என்பவருடன், நித்யா போனில் தொடர்பு கொண்டு பேசும் ஆடியோ ஆதாரமும் இடம்பெற்று உள்ளது.

அதில் மிகவும் பதற்றமாக பேசும் பாலாஜி எனும் குறிப்பிட்ட நபர், நித்யாவின் செயலினால் தான் பிரச்சனையில் இருப்பதாக தெரிவிக்கிறார். மேலும் நித்யாவின் சிம்மை தன்னிடம் ஒப்படைக்க கோரும் அவர், அந்த சிம் வேறு ஒருவருடையது என்பதை போல ஜோடிக்க திட்டம் தீட்டும் உரையாடல்களும் இடம் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

'ஒரு விவஸ்தையே இல்லாம போச்சு...!' தந்தையால் கோபத்தின் உச்சிக்கே சென்ற கார்த்தி