'மெர்சல்' திரைப்படத்தில் டாக்டர் கதாப்பாத்திர விஜய், ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவம் செய்வது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கும். இந்த காட்சிகளுக்கு விஜய் ரசிகர்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட மக்களிடம் இருந்து கைதட்டல்கள் குவிந்தது.
வெறும் திரையில் மட்டுமே தோன்றிய இந்த காட்சிக்கே இவ்வளவு வரவேற்பு கிடைத்த பட்சத்தில் நிஜத்தில் செய்யும் ஒருவருக்கு பாராட்டுக்கள் குவியாதா என்ன?
ஆம் இப்படிப்பட்ட பாராட்டுக்களை சமீபத்தில் பெற்று வருகிறார், பாஜக கட்சியின் தமிழக தலைவரான டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன். இதுவரை பாஜக கட்சி உறுப்பினராக அவர் பேசுவதை கேலி கிண்டல் மட்டுமே செய்து வந்த நெட்டிசன்கள் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தெரியவந்த தகவலை அடுத்து அவரை பாராட்டவும் துவங்கியுள்ளனர்.
குறிப்பிட்ட நேர்காணலில், லட்சங்களில் செலவு செய்ய வைக்கும் டயலசிஸ் சிகிச்சையை, ஏழைகளுக்கு இலவசமாகவும், பிறருக்கு வெறும் 200 ரூபாய் செலவிலும், தமிழிசை அவர்கள் தனது வீட்டிலேயே சேவையாக செய்து வருவது தெரியவந்தது.
இதனை கேள்விப்பட்ட பலரும், 'நாங்கள் கலாய்த்து உங்கள் கட்சியை தான், உங்களை அல்ல, நீடூடி வாழ்க தமிழிசை சௌந்தராஜன் அவர்களே' என பாராட்டி வருகின்றனர்.
Social Plugin