Ad Code

Responsive Advertisement

அவருக்கு நடிக்கவே தெரியாது..! விஜயை மட்டம் தட்டிய பிரபல இணையதளம்


தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக தளபதி விஜய் வலம்வந்து கொண்டிருக்கும் இந்த சமயத்தில், அவரை மட்டம் தட்டுவது போன்ற பட்டியலை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது பிரபல இணையதளம்.

உலக புகழ் பெற்ற, IMDB இணையத்தளம் ஒட்டுமொத்த உலக சினிமாவின் தலைசிறந்த விமர்சகராக செயல்பட்டு வருகிறது. இவை வழங்கும் மதிப்புகளை பார்த்த பிறகே திரைப்படங்களை பார்ப்பவர்களும் ஏராளம்.

இத்தகைய சிறப்பு மிக்க இணையதளம், 2018ல் தமிழ் சினிமாவின் மோசமான நடிகர்கள் எனும் பட்டியலை வெளியிட்டது. அதில் ஆறாவது இடத்தில் நடிகர் விஜய் இடம் பெற, கிளம்பியிருக்கிறது சர்ச்சை.


இதனால், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜயை எப்படி நடிக்க தெரியாதவர்கள் பட்டியலில் சேர்க்கலாம் என பலரும் கொந்தளித்து வருகின்றனர்.

இந்த பட்டியலில், நடிகர்கள் சாந்தனு, ஆதி, சிம்பு, ஜெயம் ரவி, விஷால் ஆகியவர்களின் பெயர்களும், விஜய்க்கு முன்னதாக இடம் பெற்று இருப்பதும் குறிப்பிடத்தக்கது.