Ad Code

Responsive Advertisement

என்ன ஆச்சு இந்த தமன்னாவுக்கு? அடுத்தடுத்து கிளம்பும் சர்ச்சைகள்


மில்க் பியூட்டி என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகை தமன்னா, தமிழில் முன்னணியில் இருந்த காலங்களில் சர்ச்சைகள் எதிலும் சிக்காமல் தான் உண்டு தன் நடிப்பு உண்டு என்றிருந்தார்.

ஆனால் தற்பொழுது மார்க்கெட் போய் படவாய்ப்புகள் குறைந்து விட்ட காரணத்தினாலோ என்னமோ, தேடி தேடி போய் சர்ச்சைகளில் சிக்க துவங்கி இருக்கிறார்.

முன்னதாக சிலவாரங்களுக்கு முன்னதாக, முத்தக்காட்சிக்கு மாபெரும் எதிராளியான இவர், ஹ்ரித்திக் ரோஷனுடன் மட்டும் அவ்வித காட்சிகளில் நடிக்க தயார் எனக்கூறி இருந்தார்.

சில நாட்களுக்கு முன்பு கூட #MeToo வெறும் விளம்பர நோக்கில் நடக்கும் நாடகம் என பேசி, சின்மயி போன்றவர்களின் கோபத்திற்கு ஆளாகி இருந்தார். இந்நிலையில் தற்பொழுது, பாலிவுட் நடிகர் விக்கி கௌஷல் உடன் டேட்டிங் செல்ல விருப்பம் தெரிவித்தும் பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.