Ad Code

Responsive Advertisement

நடிக்க மட்டும் தமிழ் நடிகர்கள், அதுக்கெல்லாம் பாலிவுட் நடிகர்கள்... தமன்னாவின் புதிய டீலிங்


நடிகை தமன்னா 10 வருடங்களாக தமிழ் சினிமாவில் நடித்து  வந்தாலும், இப்பொழுது அவருக்கான படவாய்ப்புகள் குறைந்து வருகிறது. இந்நிலையில் பாலிவுட்டை குறிவைத்திருக்கும் அவர், அங்குள்ள நடிகர்களை குறிவைத்து அம்பு எய்து கொண்டிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணியில் இருந்த போது, முத்த காட்சிகளில் நடிக்க மாட்டேன், பிகினி அணிய மாட்டேன் என கட்டளை போட்டவர், 'ஹ்ரித்திக் ரோஷன் நடிக்கிறார் என்றால் முத்தக்காட்சிக்கு ரெடி' என கூறி தனது நிபந்தனையை தளர்த்தி இருந்தார்.

மேலும் பல இளம் நடிகர்கள் காதல் தூது விட்டும் சிக்காத தமன்னா, பிரபல ஹிந்தி நடிகர் விக்கி கௌஷல் உடன் டேட்டிங் போக அவரே விருப்பம் தெரிவித்து பரபரப்பை கிளப்பி இருந்தார்.

இந்நிலையில் இதனை பார்த்து கொண்டிருக்கும் தமிழ் திரையுலகினர் பலர், 'நடிக்க மட்டும் தமிழ் நடிகர்கள், மத்த காதல், திருமண டீலிங் எல்லாம் பாலிவுட் நடிகர்கள் கூடயா' என விளையாட்டாக காது கடிக்கின்றனர்.