Ad Code

Responsive Advertisement

அஜித்தை தொடர்ந்து, 'நீயா நானா கோபிநாத்'... அரசியலுக்கு அழைத்த சுசீந்திரன்


வெண்ணிலா கபடிக்குழு, ஆதலால் காதல் செய்வீர் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்தும் தமிழில் முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்க முடியாமல் தவித்து வரும் இயக்குனர் சுசீந்திரன்.

இவர் திடீரென சமபந்தமே இல்லாமல், நடிகர் அஜித்துக்கு அரசியலுக்கு அழைப்பு விடுத்து பரபரப்பை கிளப்பி இருந்தார். அதனை அடுத்து,இயக்குனரின் இந்த செயல், அஜித்தின் கவனத்தை ஈர்க்க நடத்தப்பட்ட நாடகம் என்று ஒரு புறம் விமர்சனங்கள் வந்து குவிந்தது.


இதற்கிடையே தான் நடிகர் அஜித்தை அரசியலுக்கு அழைத்ததன் முழு விளக்கத்தையும் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் அளித்திருக்கிறார், இது குறித்து பேசிய அவர்,

'திருமுருகன் காந்தி, சகாயம், கருபழனியப்பன், நீயா நானா கோபிநாத் போன்ற நல்லவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என நினைக்கிறேன், மேலும் இவர்களை விட மக்கள் செல்வாக்கு அதிகம் உள்ள ஒரு நல்லவர் என்றால் அது அஜித் தான். மற்றவர்கள் பற்றி தெரியாது, ஆனால் அஜித் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார், அல்லது மாபெரும் அரசியல் மாற்றத்துக்கு காரணமாக இருப்பார்'  என அதிரடியாக தெரிவித்து இருக்கிறார்.