Ad Code

Responsive Advertisement

அஜித் மட்டும்தான் நல்லவரா.? அப்போ விஜய்.? ஏடாகூடமாக சிக்கிய இயக்குனர்


இயக்குனர் சுசீந்திரன் நடிகர் அஜித்தை அரசியலுக்கு அழைத்து பரபரப்பை கிளப்பி இருந்தார். இப்பொழுது இந்த விவகாரத்தில் நடிகர் விஜயின் ரசிகர்களிடம் ஏடாகூடமாக சிக்கி இருக்கிறார்.

இந்த அழைப்பு குறித்து முன்னதாக, நடிகர் அஜித் போன்ற நல்லவர்கள் அரசியலுக்கு வந்தால் நாடு நன்றாக இருக்கும் என கருத்து தெரிவித்திருந்தார் இயக்குனர் சுசீந்திரன்.

மேலும் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூட அஜித் மிகவும் நல்ல மனிதர்களில் ஒருவர், அவர் அரசியலுக்கு வரவில்லை என்றாலும் மாபெரும் அரசியல் மாற்றத்திற்கு காரணமாக இருப்பார் என கருத்து தெரிவித்திருந்தார்.

இயக்குனரின் இந்த பதிலுக்கு மற்றொரு மாபெரும் நடிகரான விஜயின் ரசிகர்கள், 'சமூக பிரச்சனைகளின் போது குரலே கொடுக்காத அஜித் நல்லவர் என்றால், அனைத்து பிரச்சனைகளின் போதும் ஏழை மக்களுக்காக குரல்  கொடுக்கும் எங்கள் விஜய் யார்?' என கேள்வி எழுப்பி இயக்குனரை சீண்டி பார்த்து வருகின்றனர்.