திரையுலகில் பிளேபாய் நடிகர் என பரவலாக அழைக்கப்பட்டு வந்த ஆர்யா, நடிகை சாயீஷாவை காதல் திருமணம் செய்து கொண்டு குடும்பஸ்தன் ஆகிவிட்டார்.
இந்த நிலையிலும், தன்னை அடிமையாக்கிய கெட்ட... நல்ல பழக்கத்தை தொடர்ந்து கடைபிடித்து வருகிறார். அதாவது நடிகர் ஆர்யா தன் உடலை ஃ பிட்டாக வைத்து கொள்வதில் மிதிவண்டி ஓட்டுவதையே முக்கிய உடற்பயிற்சியாக செய்து வருகிறார்.
Also Read | எல்லை மீறிய 'தளபதி 63' படக்குழு... விஜய் எடுத்த அதிரடி நடவடிக்கை
அதிகாலையில் எழுந்ததும், 40 - 50 கிலோ மீட்டர்கள் என மிதிவண்டி ஓட்டும் இவர், தன் சக நண்பர்களையும் இப்பழக்கத்தில் ஈடுபட வைக்க தீவிர முயற்சி செய்து வருகிறார்.
இதிலிருந்து பல பிரபலங்கள் தப்பி விட்டாலும், துரதிஷ்டவசமான அதிர்ஷ்டமாக நடிகர் சூர்யா இப்பொழுது ஆர்யாவிடம் சிக்கி இருக்கிறார். இருவரும் இணைந்து மிதிவண்டி ஓட்டிய புகைப்படங்களை ஆர்யா இன்று வெளியிட்டுள்ள நிலையில், குறிப்பிட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
#MMDDDDLCTworkout Sunday Special ride with one and only @Suriya_offl sir 🤗🤗🤗😘😘 Super strong as always sir 💪💪💪 Have a lovely Sunday 🤗#Kaappaan pic.twitter.com/NUO3OhBPSj— Arya (@arya_offl) March 24, 2019
Social Plugin