சிவகார்த்திகேயனின் 16 வது படத்தை, பாண்டிராஜ் அவர்கள் இயக்க உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியாகி இருந்தது. இந்த தகவல் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் உள்ளிட்ட பல திரைத்துறையினருக்கு மகிழ்ச்சியை அளித்திருந்தாலும், நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோரை புலம்ப வைத்துள்ளது.
பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து மெகா ஹிட் ஆன திரைப்படம் கடைக்குட்டி சிங்கம். விவசாயத்தையும் விவசாயிகளையும் பெருமைப்படுத்தும் படி உருவாகி இருந்த அந்த திரைப்படத்தின் மூலம், தனது திரையுலக மார்க்கெட்டை உயர்த்தி கொண்டிருந்தார் கார்த்தி.
இப்படியொரு வெற்றியை கொடுத்த இயக்குனர் பாண்டிராஜை கார்த்தியின் இன்னொரு படத்தையும் இயக்க வைக்க முடிவு செய்து, அதனை தானே தயாரிக்கவும் களம் இறங்கினார் நடிகர் சூர்யா.
ஆனால் கிட்டத்தட்ட அத்திரைப்படம் உறுதியாக இருந்த நிலையில், சிவகார்த்திகேயன் பட வாய்ப்பு கிடைத்ததும், இந்த திரைப்படத்தினை உதறி தள்ளிவிட்டு சென்றுவிட்டார் பாண்டிராஜ்.
With all your whishes & blessings I am Happy to share that my next project is with @sunpictures & My Lovely Brother @Siva_Kartikeyan 🙏👍 https://t.co/igCVSMh2Sv— Pandiraj (@pandiraj_dir) March 8, 2019
இயக்குனரின் இந்த செயலினால் செம டென்ஷனான நடிகர் சூர்யா, 'சிவகார்திகேயனுக்காக எங்களை கைவிட்டு விட்டாரே' என புலம்பி வருகிறாராம்.
தொடர்புடைய செய்திகள்
அவருடன் என்றால் முத்தக் காட்சிக்கு ரெடி... தமன்னாவின் புதிய ஆஃபர்
Social Plugin