Ad Code

Responsive Advertisement

சூப்பர் டீலக்ஸ் வசனமும் சுட்டதா!!! அதிர்ச்சியில் ஆழ்த்தும் காணொளி


தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் சமீபத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் திரைப்பட ட்ரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் குறிப்பாக ட்ரைலர் முழுவதும் கேப்பே இல்லாமல் விஜய் சேதுபதி பேசிய வசனத்திற்கு பாராட்டுக்கள் குவிந்தது.

இதனால் படக்குழுவினருக்கும் பட ரிலீசுக்கு முன்பே நல்ல பெயர் கிடைத்தது. இந்நிலையில் தற்பொழுது வெளிவந்துள்ள பழைய திரைப்படத்தின் காணொளி ஒன்று, 'அடப்பாவிகளா இந்த வசனமும் சுட்டதா? என ரசிகர்களையும் திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

1969ஆம் ஆண்டு வெளியான 'சாந்தி நிலையம்' திரைப்படத்தில் ஜெமினி கணேசன் அவர்கள், குழந்தைகளுக்கு கதை சொல்லும் காட்சியில், ஒருவனை காட்டில் யானை துரத்த என அவர் பேசிய வசனம் ஒரு சில பட்டி டிங்கரிங் உடன், யானை புலியாக மாறி, சூப்பர் டீலக்ஸ் வசனமாகி இருக்கிறது.

இதனை அத்திரைப்பட காட்சியோடு சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் பகிர்ந்து வரும் நிலையில், திருடனுக்கு தேள்கொட்டியதை போல விழித்துக்கொண்டு இருக்கின்றனர் படக்குழுவினர்.