Ad Code

Responsive Advertisement

நடிகைகள் குறித்து சர்ச்சை பேச்சு!!! ராதாரவியை மிஞ்சிய ஸ்டாலின்.. வைரலாகும் வீடியோ


திமுக கட்சியின் செல்வாக்கு உள்ள நடிகரான ராதாரவி அவர்கள், நடிகை நயன்தாரா குறித்து விமர்சனம் செய்து சர்ச்சையில் சிக்கி இருந்தார். இதனை அடுத்து பெண்களை இழிவாக பேசி இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என அவரை இடை நீக்கம் செய்தது அக்கட்சி.

இப்படி இருக்க, 'அக்கட்சியின் தலைவரான நீங்களே நடிகளைப் பற்றி தரக்குறைவாக பேசி இருக்கிறீர்களே' என ஸ்டாலின் அவர்களை விமர்சனம் செய்யும் விதத்தில் வைரலாகி வருகிறது வீடியோ ஒன்று.

குறிப்பிட்ட வீடியோவில், மேடையில் பாஜக தலைவர் மோடியை விமர்சித்து மேடையில் பேசும் ஸ்டாலின், 'பெரிய பெரிய தொழிலதிபர்களை சந்திக்க நேரம் இருக்கிறது, நடிகர்களை சந்திக்க நேரம் இருக்கிறது, கேவலம் நடிகைகளை சந்திக்க நேரம் இருக்கிறது, ஆனால் 100 நாட்கள் போராடிய விவசாயிகளை சந்திக்க நேரம் இல்லையா?' என கேள்வி எழுப்புகிறார்.

இந்த உரையில் அவர் 'கேவலம் நடிகைகள்' என பேசி இருந்தது இப்பொழுது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. 'கட்சி உறுப்பினர் ஒருவர் பெண்களை இழிவு படுத்துவதாக கூறிவிட்டு நீங்களே இப்படி பேசலாமா?' என பலரும் இதற்கு தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.