Ad Code

Responsive Advertisement

மது ஊற்றி கொடுத்து ஸ்ரீ ரெட்டி செய்த லீலை... போலீஸ் விசாரணையில் அம்பலம்


தெலுங்கு திரையுலகில் தொடங்கி, தமிழ் சின்னத்திரை நடிகர்கள் வரை அடுக்கடுக்கான பாலியல் புகார்களை வெளியிட்டு ஓவர் நைட்டில் ஒபாமா ஆனவர் நடிகை ஸ்ரீ ரெட்டி.

இந்த பிரபலத்தால், தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்பட வாய்ப்புகளை பெற்று நடித்து வரும் இவர், பிரபலம் ஒருவர் குறித்து அரங்கேற்றிய நாடகம் போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு நடிகை ஸ்ரீ ரெட்டி, பிரபல சினிமா பைனான்சியர் சுப்பிரமணியன் மது அருந்திவிட்டு தன் வீட்டில் வந்து கலாட்டா செய்ததாகவும். வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கியதாகவும் புகார் அளித்திருந்தார்.


இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டிருந்த நிலையில், முன்னுக்கு பின் முரணாக பேசிய ஸ்ரீ ரெட்டியின் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் அவரது பக்கம் விசாரணையை திருப்ப, அவரே குறிப்பிட்ட நபரை வீட்டிற்கு அழைத்து மது ஊற்றி கொடுத்ததும், வீட்டிலுள்ள பொருட்களை உடைத்தும் அம்பலமானது.

இதனால் பயங்கர கோபத்திற்கு ஆளான போலீசார், மீண்டும் இதுபோன்ற செயலில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீரெட்டியை எச்சரித்து அனுப்பியுள்ளதாக பேசப்பட்டு வருகிறது.