Ad Code

Responsive Advertisement

அஜித்தின் காலுக்கு கீழ் என் தலை... பரபரப்பை கிளப்பிய ஸ்ரீ ரெட்டியின் பதிவு


தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி அடுக்கடுக்கான பாலியல் புகார்கள் மூலம், ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தவர். இவரது குற்றச்சாட்டுகளில் பெரும்பான்மையானவற்றிருக்கு ஆதாரம் இல்லாமல் போன நிலையில், விளம்பரத்திற்காக இவ்வாறு செய்கிறார் எனவும் இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

பாலியல் விமர்சனங்கள் மட்டுமல்லாது, பிரபலத்திற்காக பிறரை புகழவும் செய்த இவர் தற்பொழுது நடிகர் அஜித்தின் பக்கம் திரும்பி இருக்கிறார். அஜித் பற்றி இவர் சமீபத்தில் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள நிலையில், அந்த பதிவு வைரலாகி வருகிறது.

குறிப்பிட்ட பதிவில், 'அஜித்தின் புகைப்படத்தை பார்க்காமல் நான் தூங்க செல்லமாட்டேன். தென்னிந்திய சினிமாவில் நம்பர் 1 ஆன இவர், சர்ச்சைகளில் சிக்குவதில்லை. நல்ல மனிதர், நல்ல நடிகர், ரசிகர்களை மதிப்பவர், நல்ல கணவர் மற்றும் தந்தை. கோடிக்கணக்கான பெண்களின் இதயத்தை கொள்ளை அடித்தவர், என்னுடையதும் உட்பட. என் தலை அவர் காலிலே' என பயங்கரமாக ஐஸ் வைத்து பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.

'ஸ்ரீ ரெட்டி குசும்பு காரி, அஜித் பட வாய்ப்பு கேக்குறா'