Ad Code

Responsive Advertisement

'இந்தியா-பாகிஸ்தான்' போரை கிண்டல் செய்த டிவி பிரபலம்... வெளுத்து வாங்கும் வெளிநாட்டினர்


இந்தியா பாகிஸ்தான் இடையே தற்பொழுது போர் மூழும் சூழ்நிலை நிலவி, ஒட்டுமொத்த மக்களையும் பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் ஏற்படப்போகும் பின்விளைவுகளை எண்ணி ஒட்டுமொத்த உலகும் கவலைகொண்டிருக்கும் நிலையில், ஆப்பிரிக்க டிவி பிரபலம் இப்போரை கிண்டல் செய்து பேசியுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த, நகைச்சுவை டிவி நிகழ்ச்சி பிரபலம் 'ட்ரெவர் நோவா'. சமீபத்திய நிகழ்ச்சியில் இந்தியா, பாகிஸ்தான் இடையேயான சண்டை குறித்து பேசி இருந்த இவரே தற்பொழுது சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

அந்நிகழ்ச்சியில், இந்தியா பாகிஸ்தான் இடையே போர் மூண்டால் உலக வரலாற்றிலேயே மிகவும் பொழுதுபோக்கான போராக இது இருக்கும், என ஹிந்தி பாடல் ஒன்றை பாடியவாறே, நகைச்சுவை செய்வதாக எண்ணி பேசி இருந்தார்.


இதனை கண்ட அவரது தென்னாப்பிரிக்க நாட்டு மக்களே, இரு நாடுகளுக்கிடையேயான போர்  உங்களுக்கு பொழுதுபோக்கா? அங்கே மக்கள் சாவது எப்படி உங்களுக்கு சுவாரஸ்யத்தை தரும்? நம் நாட்டில் போர் மூண்டாலும் இப்படித்தான் கிண்டல் செய்து பேசுவீர்களா? என சகட்டு மேனிக்கு விமர்சித்து வருகின்றனர்.