Ad Code

Responsive Advertisement

நடிகர் தனுஷிற்காக ஸ்னேகா எடுத்த ரிஸ்க்... ரசிகர்கள் அதிருப்தி


தனுஷ் நடிக்கும் திரைப்படத்தில் அவருக்கு அம்மாவாக நடிக்க இருக்கிறார் நடிகை சினேகா.

10 வருடங்களுக்கு முன்னதாக விஜய், அஜித், கமல் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து, முன்னணி நடிகையாக வலம்வந்தவர் சினேகா. நடிகர் பிரசன்னாவை அவர் காதல் திருமணம் செய்து கொண்ட பின்னர், நாயகி வாய்ப்புக்கள் பறிபோனது.

என்றாலும் கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதாப்பாத்திரங்களில் நடிக்க முடிவு செய்து கதை கேட்டு வந்தார். என்றாலும் எதிர்பார்த்த கதாப்பாத்திரங்கள் கிடைக்காத காரணத்தினால், அவர் எடுத்திருக்கும் புதிய முடிவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

Also Read | 'சீதையாவும் நடிப்பார் கூப்பிட்டாலும் போயிடுவார்'... நயன்தாராவை விளாசிய ராதாரவி

முக்கிய கதாபாத்திரங்கள்தான்  வேண்டும் என அடம்பிடித்துக் கொண்டிருந்த சினேகா, கொடி படத்தை இயக்கிய செந்தில்குமார் அவர்களின் திரைப்படத்தில் தனுஷின் அம்மாவாக நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.

இந்த கதாபாத்திரத்தில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு, நாயகனாக நடிப்பது தனுஷ் என்பதும், அவரது தந்தை வேடத்திலும் தனுஷே நடிக்கிறார் என்பதும்தான் என்கிறது சினிமா வட்டாரங்கள்.