Ad Code

Responsive Advertisement

'ஒரு விவஸ்தையே இல்லாம போச்சு...!' தந்தையால் கோபத்தின் உச்சிக்கே சென்ற கார்த்தி


தன் தந்தை சிவகுமார் தொடர் செல்பி சர்ச்சைகளில் சிக்கி வரும் நிலையில், அதன் விமர்சனங்களுக்கு மேடையில் கோபமாக பதிலளித்து இருக்கிறார் நடிகர் கார்த்தி.

மூத்த நடிகரான சிவகுமார், தன்னுடன் அனுமதி இன்றி செல்பி எடுக்க முயலும் ரசிகர்களின் மொபைல் போனை தட்டி விட்டு சர்ச்சையில் சிக்கும் சம்பவங்கள் வாடிக்கையாகி விட்டது.

இதனால் சமூக வலைத்தளங்களில் மோசமாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில், இசை வெளியீட்டு விழா ஒன்றில்  மறைமுகமாக தன் தந்தையை நடிகை கஸ்தூரி கலாய்க்க, பொங்கி எழுந்தார் நடிகர் கார்த்தி.

குறிப்பிட்ட நிகழ்வின் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த நடிகை கஸ்தூரி, மேடையில் தோன்றிய கார்த்தியுடன், 'உங்க அப்பா இல்லை அதனால் அவசரமாக செல்பி எடுத்துக்கொள்ளலாம்' எனக் கூறி செல்பிஎடுக்க முயன்றார்.


இதனால் கோபமடைந்த நடிகர் கார்த்தி, 'செல்பி என்ற ஒன்றினால் யாருக்கும் மரியாதை இல்லாமல் போய்விட்டது. கேட்டு போட்டோ எடுக்கணும் என்கிற விவஸ்தை கூட இல்லை.

திடீரென மூஞ்சிக்கும் முன்னால் கொண்டுவந்து நிறுத்துவது, அதில் பின்னாடி முன்னாடி என்று பிளாஸ் வேறு. மரியாதையாக அனுமதி பெற்று போட்டோ எடுக்கவேண்டும் என்பது கூட தெரியாத அளவுக்கு நாம் இருக்கிறோம்' என பொங்கி எழுந்து விட்டார்.

தொடர்புடைய செய்திகள்

'என் சக நடிகர்களுக்கு விராட் கோலி எவ்வளவோ மேல்'...  தமன்னா சர்ச்சை கருத்து