Ad Code

Responsive Advertisement

இதுக்கு மட்டும் பேச வர மாட்டீங்களே..? சின்மயியை வறுத்தெடுத்த இணையவாசிகள்


#MeToo இயக்கம் வழியாக பல சினிமா பிரபலங்களின் உண்மை முகத்தை வெளிக்கொண்டு வந்து பிரபலமடைந்தவர் பாடகி சின்மயி. இந்நிலையில் பொள்ளாச்சியில் நடந்த கொடூர கற்பழிப்பு சம்பவங்களுக்கு குரல் கொடுக்காதது ஏன் என பலரும் அவரிடம் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சினிமா துறையில் உள்ளவர்கள் பாதிக்கப்பட்டால் தான் அவர் குரல் கொடுப்பார், அவர் முன்னாள் செய்தது எல்லாம் விளம்பரத்திற்காக, அதில் காசு வரும் இதில் வருமா? என ஆளாளுக்கு குற்றம் சுமத்த துவங்கினர்.

Also read | 'எவனோ கற்பழிச்சதுக்கு ஏன் அந்த கட்சியை இழுக்குறீங்க.?' பொள்ளாச்சி விவகாரத்தில் காயத்ரி சர்ச்சை பேச்சு

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து அதிரடியாக பதில் அளித்து இருக்கும் சின்மயி. 'சமூக வலைத்தளங்களில் என் மீதான குற்றச்சாட்டுகளை அதிகம் பார்க்கிறேன். அவர்களுக்கெல்லாம் ஆங்கிலம் தெரியாது என்றே நினைக்க தோன்றுகிறது.

நேற்று காலை முதல் இப்பிரச்சனை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, வழக்கம் போல பதிவிட்டு வருகிறேன்.' என்றிருந்தார்.