தமிழ் திரைப்பட நாயகியும், உலகநாயகன் கமல்ஹாசனின் மகளுமான நடிகை ஸ்ருதி ஹாசன், விளையாட்டாக மொழி குறித்து பேச அது வினையாக முடிந்திருக்கிறது.
நடிகையாக மட்டுமல்லாது நல்ல பாடகியாகவும் தன்னை நிரூபித்த ஸ்ருதிஹாசன், படவாய்ப்புகள் இல்லாத இந்த சமயத்தில் ஆங்கிலப் பாடல்களை பாடி வெளியிட்டு வருகிறார்.
இது குறித்து பேசி இருந்த அவர், சிறு வயதில் இருந்தே எனக்கு ஆங்கிலப்பாடல்களின் மீது ஆர்வம் அதிகம், தமிழ் பாடல்கள் அம்மா அப்பா பாடும்போது கேட்டதோடு சரி, என பதிலளித்து இருந்தார். நடிகையின் இந்த பதிலானது, சிலரின் தமிழ் உணர்வுகளை தூண்டி பார்க்க, கடுமையாக அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.
என்னதான் தமிழ் பெண்ணாக இருந்தாலும், தமிழ் திரைப்படங்களில் நடிக்கும் வரை ஸ்ருதி ஹாசனுக்கு சரியாக தமிழ் பேச தெரியாது என்பதும் கூடுதல் தகவல்.
Social Plugin