நடிகர் கமலின் மகள் என்ற அடையாளத்தை தாண்டி, பாடகி, நடிகை என தனது பல்முக திறமைகளை நிரூபித்து, தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி கொண்டவர் நடிகை ஸ்ருதி ஹாசன்.
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னனியினை நோக்கி அசுர வேகத்தில் வளர்ந்த இவர், அடுத்தடுத்த தோல்வி படங்களின் காரணமாக வாய்ப்புகள் இன்றி தவித்து வருகிறார்.
என்றாலும் அவ்வப்போது தனது அழகிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்த தவறாத இவர், விமான நிலையம் செல்லும் வழியில் ரசிகர்களின் கேமராவில் சிக்கி இருக்கிறார்.
மேக்கப் ஏதும் இன்றி, மிக்கி மௌஸ் கொண்டை, குட்டை பாவாடை என கியூடாக அவர் தோன்றி இருந்த அந்த புகைப்படங்கள் இப்பொழுது சமூக வலைத்தளங்களில் செம வைரல்.
Social Plugin