Ad Code

Responsive Advertisement

திருமணத்திற்கு பின்பும் தடை போடாத ஆர்யா... மகிழ்ச்சியில் சயீஷா!!!


தமிழ் திரையுலகில் பிளே பாய் நடிகர் என விமர்சிக்கப்பட்டு வந்த ஆர்யா, இளம் நடிகை சாயீஷாவை அண்மையில் காதல் திருமணம் செய்து கொண்டிருந்தார்.

ஹைதராபாத்திலுள்ள ஃபலக்ணுமா ஃபேலசில் கோலாகலமாக நடைபெற்ற இவர்களது திருமணம்தான் பல நாட்களாக கோலிவுட்டில் ஹாட் டாக்.

இதற்கிடையே, வளர்ந்து வரும் சூழ்நிலையில் சாயீஷா திருமணமா செய்து கொண்டதால், 'இனிமேல் நடிக்க வருவாரா?' என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது.

Also Read | இனிமேல் அதற்கு நோ...! பட்டு திருந்திய கீர்த்தி சுரேஷ்

இந்நிலையில், சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில், புதுமண தம்பதிகளாக ஆர்யா மற்றும் சாயீசா இணைந்து நடிக்க உள்ளது குறித்த தகவல் வெளியாகி, ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலாகவும் அமைந்திருக்கிறது.

மேலும் தன்னுடன் மட்டுமல்லாது, வழக்கம் போல சாயீஷா பிற நடிகர்களுடன் நடிக்கவும் ஆர்யா முழு அனுமதி வழங்கியுள்ளதாகவும், அதனால் வாய்ப்புகள் வரும் பட்சத்தில், சாயீஷா தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பார் என்கிறது கோலிவுட் வட்டாரம்.