Ad Code

Responsive Advertisement

அசிங்கப்படுத்திய நாயகிகள்... சந்தானம் கொடுத்த சரியான பதிலடி


நடிகர் சந்தானம், வடிவேலுவுக்கு பிறகு காமெடியில் எவ்வளவு பெரிய சகாப்தமாக வலம்வந்தார் என்பதை இக்கால இளசுகள் அறியும். 'காமெடியனாக நடிக்க மாட்டேன்' என்ற அவரது முடிவே இன்று, யோகிபாபு போன்ற புதுநடிகர்கள் காமெடியில் ஜொலிக்க காரணம் என்பதும்  மறுக்க முடியாத உண்மை.

அனைத்தையும் தாண்டி இன்று 'நடித்தால் நாயகனாக தான் நடிப்பேன்' என்ற முடிவில் உறுதியாக இருந்து வரும் சந்தானம், அதனால் சந்தித்த அவமானங்களும் ஏராளம்.

திரைப்படங்களில் தனக்கு ஜோடியாக நடிக்க தமிழ் சினிமாவின் இள நாயகிகள் சிலருக்கு அழைப்பு விடுக்க, 'காமெடியனுக்கு ஜோடியாக நடிக்க முடியாது' எனக்கூறி நிராகரித்து விட்டனர்.

என்றாலும் மனமுடையாத அவர், பாலிவுட்டில் இருந்து நாயகிகளை இறக்கி தொடர்ந்து நாயகனாக நடித்து வந்தார். இன்றைய சூழலில் அவரை நாயகனாக ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு ரசிகர்களும் வந்துவிட்டனர். 

இதனால் அவருடன் நடிக்க மறுத்த நாயகிகளே, மீண்டும் தொடர்பு கொண்டு, படவாய்ப்புகளை கேட்டு வருகின்றனராம். இத்தகைய சூழ்நிலை விரைவில் வரும் என எதிர்பார்த்து காத்திருந்த நடிகர் சந்தானமும், 'மார்க்கெட் போன நாயகிகளுடன் நடிப்பதில்லை' என திரைப்படங்களில் பிற கதாப்பாத்திரங்களை நோஸ் கட் செய்வது போல, பதிலடி கொடுத்து வருகிறாராம்.