திரைப்படங்கள் மட்டுமல்லாது விளம்பரங்கள் மூலமும் திரையுலக பிரபலங்கள் கோடி கோடியாக வருமானம் ஈட்டி வருகின்றனர். இதன் காரணமாக மக்களுக்கு பயனுள்ளதோ இல்லையோ, எதை வேண்டுமானாலும் விளம்பர படுத்த தயாராக இருக்கின்றனர் பிரபலங்கள்.
உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நொறுக்கு தீனி விற்பனை செய்யும் தனியார் நிறுவனங்களும், 'நம்மூர் மக்கள் விளம்பரப்படுத்தினால், ஆட்டு மூத்திரத்தை கூட சுத்த இளநீர் என்று ஒரு கை பார்த்து விடுவார்கள்' என்ற புலிகேசி திரைப்பட வசனத்திற்கேற்ப சினிமா பிரபலங்களை வைத்து விற்பனையில் தெறிக்க விட்டு வருகின்றன.
Also Read | ஜன்னல் வச்ச டீசர்ட் பாத்துருக்கீங்களா..? ராய் லக்ஸ்மியை கலாய்க்கும் நெட்டிசன்கள்
இந்நிலையில் நடிகை சமந்தாவும், நொறுக்கு தீனிகளில் மாபெரும் சர்ச்சையை கிளப்பி இருந்த 'குர்குரே' நிறுவனத்தின் விளம்பர தூதராகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார். இவ்வகை நொறுக்கு தீனிகளை உண்ணும் போது குழந்தைகளுக்கு உடல் எடை மற்றும் இரத்த அழுத்த அதிகரிப்பு ஆகிய பிரச்சனைகள் ஏற்படும் என அதிகாரபூர்வமாக கண்டறியப்பட்டு உள்ளது.
Extremely happy to partner with Kurkure. To celebrate their 20th anniversary, Kurkure has a little surprise 😁 Presenting, the upgraded Kurkure Masala Munch with Gingelly Oil.— Samantha Akkineni (@Samanthaprabhu2) March 12, 2019
Hope you love this new chatpata treat from Kurkure!@KurkureSnacks pic.twitter.com/KBkrCAT1HA
இதன் பின்னரும் ஒரு முன்னணி நடிகை இவ்வகை உணவு பொருட்களை விளம்பரப்படுத்துவதை கண்டு கொதித்தெழுந்த ரசிகர்கள், 'நீங்கள் மட்டும் டயட், சத்தான உணவு என ஆரோக்கியமாக இருப்பீர்கள். உங்களை ரசித்த காரணத்திற்காக நாங்கள் இதனை உண்டு உடல் நலத்தை கெடுத்துக்கொள்ள வேண்டுமா?' என கருத்துக்களால் சமந்தாவை சீண்டி வருகின்றனர்.
Social Plugin