Ad Code

Responsive Advertisement

நான் இரண்டாவது மனைவியா..? ஆடிப்போன சாய்பல்லவி


இயக்குனர் A.L. விஜயுடன் தன்னை இணைத்து வெளியான வதந்திகளால் கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டாராம் நடிகை சாய்பல்லவி.

உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் பிரபலமாகி, பிரேமம் எனும் ஒரே திரைப்படத்தில் நட்சத்திர அந்தஸ்தை பிடித்தவர் நடிகை சாய்பல்லவி.

என்றாலும், கிடைத்தவரைக்கும் லாபம் என அனைத்து திரைப்படங்களிலும் நடித்து விடாமல், தனக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் மட்டுமே நடித்து வந்தார்.

மேலும் திரையில் நடனமாட சிறு வாய்ப்பு கிடைத்தாலும் அசத்தி விடும் இவர், ரௌடி பேபி பாடல் உலக புகழ் அடைய காரணமாகவும் அமைந்தார்.

இப்படி திரைத்துறையில் ஒருவர் வளர்ந்தால், அதனை தடுக்க அவரை பற்றி வதந்தி கிளப்பி விட ஒரு கூட்டமே இருக்கும் நிலையில், சாய்பல்லவி விரைவில் இயக்குனர் விஜயை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியானது.

இது குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்த நடிகை சாய்பல்லவி, 'இன்னும் என்னைப்பற்றி எத்தனை வதந்திகளைத்தான் கிளப்புவார்களோ?' என நட்பு வட்டாரங்களிடம் புலம்பி வருகிறாராம்.