Ad Code

Responsive Advertisement

உண்மையான லேடி சூப்பர் ஸ்டார் 'சமந்தா'!!! நயன்தாராவை வெறுப்பேற்றும் ரசிகர்கள்


தியாகராஜ குமாரா ராஜா இயக்கத்தில், விஜய் சேதுபதி, சமந்தா, ஃபகத்பாசில் என மாபெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் திரைப்பட,ம் சூப்பர் டீலக்ஸ்.

நேற்று வெளியாகி சக்கை போடு போட்டுவரும் இந்த திரைப்படத்தினால், நடிகை சமந்தாவிற்கு 'சிறந்த நடிகை' என உலக அளவிலான அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இத்திரைப்படத்தில், வலுக்கட்டாய திருமணத்திற்கு பின்பு, முன்னாள் காதலனுடன் தகாத உறவில் ஈடுபட்டு பிரச்சனையில் சிக்கி தவிக்கும் பெண்ணாக தனது நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தி இருந்த நிலையில், 'தி நியூயார்க் டைம்ஸ்' எனும் பிரபல ஆங்கில பத்திரிக்கை சமந்தாவின் நடிப்பை பாராட்டி நேர்மறை விமர்சனம் செய்துள்ளது.

இதனை கண்ட நடிகை சமந்தாவின் ரசிகர்கள் உள்ளிட்ட தமிழ் சினிமா ரசிகர்கள் பலர், 'உண்மையான லேடி சூப்பர் ஸ்டார் நீங்கள்தான்' என சமந்தாவை புகழ்ந்து வருகின்றனர். இந்த விமர்சனம், ரியல் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாராவின் ரசிகர்களை கொந்தளிக்க செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.