Ad Code

Responsive Advertisement

ஓராண்டாகியும் கைக்கு வராத பரிசு... 'சரிகமப' ரமணியம்மாளின் பரிதாப நிலை


'சரிகமப' எனும் இசை நிகழ்ச்சியின் மூலம் இந்த வயதிலும் சாதிக்கலாம் என நிரூபித்து காட்டி இருந்தார் '63' வயதான ரமணியம்மாள். வீட்டு வேலை செய்து பிழைப்பு நடத்திவந்த இவரின் பாடும் திறமையால், குறிப்பிட்ட நிகழ்ச்சியில் வாய்ப்பை பெற்று அதில் இரண்டாம் இடமும் பிடித்தார்.

இதன் மூலம் கிடைத்த பெயர் புகழினால் சினிமா மற்றும் இசை நிகழ்ச்சிகளில் பாடும் வாய்ப்புகள் வந்தாலும், இன்றும் வீட்டு வேலை செய்வதை விடாத ரமணியம்மாள், 'சரிகமப நிகழ்ச்சியில் அளித்த விவசாய நிலம் ஓராண்டாகியும் கைக்கு வரவில்லை' என பிரபல பத்திரிகை நிறுவனத்திற்கு அளித்த பெட்டியில் கூறி அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார்.


நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த 5 லட்ச ரூபாயை மட்டும், தனது 7 பிள்ளைகளுக்கு சரிசமமாக பிரித்து கொடுத்துவிட்டு, தனது பரிசுத்தொகையில் ஒரு பைசா பெறாத அவர், பணம் என்ன பணம், இசை நிகழ்ச்சிகளில் பாடி பிழைத்து கொள்வேன் என தெரிவித்து நெகிழவும் வைத்திருக்கிறார்.

விவசாய நிலம் வழங்கப்படாதது குறித்து  குறிப்பிட்ட டிவி சேனலும், 'நிலம் வழங்குவதாக கூறிய ஸ்பான்சர் நிறுவனம், அதற்கான வழிமுறை படி செயல்படுவதால் தாமதமாகி விட்டது. ரமணி அம்மாள் அவர்களுக்கு அந்த நிலத்தை வாங்கி கொடுப்பது எங்களது முழு பொறுப்பு' எனவும் விளக்கம் அளித்திருக்கிறது.