தமிழ்,தெலுங்கு திரையுலகில் பிரபலமான ஒரு நடிகையான ராய் லக்ஸ்மி, தனது வெளிப்படையான பதிலால் ரசிகர்களை திக்குமுக்காட செய்திருக்கிறார்.
சமூக வலைத்தளங்களில் தினம் தினம் தனது கவர்ச்சி புகைப்படங்களால் ரசிகர்களை கிறங்கடித்து வருபவர் நடிகை ராய் லக்ஸ்மி. இந்நிலையில் தான் உடைகளில் மட்டுமல்ல, மனதளவிலும் ஒளிவு மறைவு இல்லாத ஒருவர் என்பதனை நேர்காணல் ஒன்றில் நிரூபித்து இருக்கிறார்.
பெரும்பாலும் திரையுலக நாயகிகள், தனக்கு நாளை திருமணம் என்றால் கூட, இன்று வரை தான் எவரையும் காதலிக்கவே இல்லை என சத்தியம் செய்யாத குறையாக அடித்து சொல்லும் குணம் படைத்தவர்கள் (மார்க்கெட் போய் விடுமோ என்ற பயம்தான்).
இவர்களுக்கு மத்தியில் இழந்த மார்க்கெட்டை திரும்ப பெற்றுவரும் நிலையிலும், தனது காதல் அனுபவங்கள் பற்றி வெளிப்படையாக பேசி இருந்தா ராய் லக்ஸ்மி.
இது குறித்து பேசிய அவர், சிறு வயது முதலே எனக்கு ஏகப்பட்ட ஆண் நண்பர்கள். இதனால் காதல் அனுபவங்களும் எனக்கு அதிகம். என்னை பற்றி வெளியான காதல் செய்திகளில் பெரும்பாலானவை உண்மையே என வெளிப்படையாக போட்டு தாக்கி இருக்கிறார்.
Social Plugin