Ad Code

Responsive Advertisement

சிறுமியின் காலில் விழுந்த 'ராகவா லாரன்ஸ்'... ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய சம்பவம்


#Ragava lawrance #Ditya Bhande #Dance Performance 

விருது வழங்கும் விழாவில் குழந்தை நட்சத்திரத்தின் காலில் விழுந்து பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார் நடிகர் ராகவா லாரன்ஸ்.

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், சமூக சேவகர் என பல துறைகளில் சாதித்து காட்டியவர் ராகவா லாரன்ஸ். இவர் சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்டார்.

A.L விஜய் இயக்கத்தில் உருவான 'லக்ஸ்மி' திரைப்பட நாயகியான குழந்தை நட்சத்திரம் 'டிட்யா'. இவருக்கு நடனத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி இருந்த இத்திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரம் விருது வழங்கப்பட்டது.

அதனை வழங்க மேடை ஏறிய ராகவா லாரன்ஸ், தொகுப்பாளரின் வேண்டுகோளுக்கு இணங்க டிட்யாவுடன் இணைந்து நடனமாடினார். அப்பொழுது அவரது நடன திறமையை கண்கூடாக கண்ட ராகவா லாரன்ஸ், அவரது காலில் விழ சென்றார்.

என்னதான் தன்னை விட வயதில் சிறியவராக இருந்தாலும், அவரது திறமையை போற்றும் விதத்தில், ராகவா லாரன்ஸ் இவ்வாறு நடந்து கொண்டது ரசிகர்களை அதிர்ச்சியிலும் வியப்பிலும் ஆழ்த்தி இருக்கிறது.