Ad Code

Responsive Advertisement

'சீதையாவும் நடிப்பார் கூப்பிட்டாலும் போயிடுவார்'... நயன்தாராவை விளாசிய ராதாரவி


தமிழ் சினிமாவில் நாயகர்களுக்கு இணையான மவுசு உள்ள நடிகை என்றால் அது நயன்தாராதான். நடுத்தர நாயகர்களை விட அதிகம் சம்பளம் பெரும் இவர், இந்த நிலையை அடைய பட்ட கஷ்டங்கள் ஏராளம்.

இதன் இடையே பல சர்ச்சைகளை அவர் சந்தித்து இருந்தாலும், முன்னணி நாயகியாக இன்று சாதித்து காட்டி இருக்கிறார். இந்நிலையில் அவர் நடிப்பில் வெளியாகவுள்ள கொலையுதிர் காலம் எனும் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில், நடிகர் ராதாரவி அந்த சர்ச்சைகள் குறித்து படு மோசமாக விமர்சித்து பேசி இருந்தார்.

அதில், நடிகை நயன்தாரா நல்ல நடிகை தான், ஆனால் அவரை நடிகையர் திலகம், புரட்சி தலைவர் உடன் ஒப்பிடுவதை ஏற்க முடியாது. அவர் பற்றி வெளியான செய்திகள் அனைவருக்கும் தெரியும், ஆனால் தமிழக மக்கள் 4 நாளில் மறந்து விடுவார்கள் என்பதனால் இன்றும் அவர் நடித்து கொண்டிருக்கிறார்.

Also Read | 'படுகவர்ச்சி' உடையில் 'படுமோசமாக' போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன்.. வைரல் புகைப்படம்  

ஒரு பக்கம் பேயாக நடித்தால், மறுபக்கம் சீதையாக நடிக்கிறார். அப்படியொரு புனித கதாபாத்திரத்தில் நடிக்க முன்பெல்லாம் புனிதமான நடிகையை தேடுவார்கள். ஆனால் இப்பொழுது அப்படியில்லை, பார்த்தவுடன் கும்பிடுவர்களும் நடிக்கிறார்கள், பார்த்தவுடன் கூப்பிடுபவர்களும் நடிக்கிறார்கள்' என பேசி சர்ச்சையை கிளப்பி இருக்கிறார்.