Ad Code

Responsive Advertisement

'நயன்தாரா-ராதாரவி' பஞ்சாயத்தில் ராதிகாவை வம்புக்கு இழுத்த சின்மயி


'நயன்தாரா-ராதாரவி' பிரச்சனையில் இப்பொழுது நடிகை ராதிகாவை வம்புக்கு இழுத்திருக்கிறார் பாடகி சின்மயி.

'கொலையுதிர் காலம்' பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் நயன்தாராவை தாக்கி பேசி படாத பாடு பட்டார் ராதாரவி. இந்த விவகாரத்தில் தனது சகோதரரின் செயலை நடிகை ராதிகாவும் கண்டித்து இருந்தார்.

இந்த பிரச்சனைகளுக்கிடையே, தான் நீண்ட நாள் போராடியும் கிடைக்காத நீதி, நயன்தாராவால் கிடைத்து விட்டதாக மகிழ்ச்சியில் இருக்கிறார் 'மீட்டு' சின்மயி.

மேலும் இப்பொழுது ராதாரவியின் மேல் மக்கள் மிகுந்து கோபத்தில் இருக்கும் நிலையில்,  இதுதான் சமயம் என்று ராதிகா அவர்களின் 'வாணி ராணி' தொடர் குறித்த தனது மாற்றுக்கருத்தையும் தெரிவித்து இருக்கிறார்.

குறிப்பிட்ட தொடரில், 'மீட்டூ' வழியை தவறாக பயன்படுத்தி போலி பாலியல் குற்றச்சாட்டு வைப்பது போன்ற காட்சி அடங்கிய காணொளியை பகிர்ந்திருக்கும் அவர், இவ்வளவு பெரிய இடத்தில் இருந்து கொண்டு இப்படியொரு காட்சியை வைத்தது ஏன் என கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு, 'பெண்கள் குறித்த பிரச்சனைகளுக்கு எப்பொழுதும் குரல் கொடுத்தவள் நான். குறிப்பிட்ட தொடர் குறித்த பிரச்சனைக்கு நேரில் வந்து தொடர்பு கொள்ளுங்கள்' என ராதிகாவும் பதிலளித்து இருக்கிறார்.