Ad Code

Responsive Advertisement

எந்த தைரியத்தில் ஆடினாரோ..! நயன்தாராவால் அதையே இழந்த ராதாரவி


கொலையுதிர்காலம் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் நடிகை நயன்தாராவை தரக்குறைவாக பேசிய விவகாரத்தில் நடிகர் ராதாரவிக்கு கண்டனங்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

சாதாரண மக்கள், சினிமா பிரபலங்கள், அரசியலவாதிகள் என பலதரப்பட்டவர்களும் 'ராதாரவி அவர்களின் பேச்சு தவறு' என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதன் காரணமாக, பிரபல படத்தயாரிப்பு நிறுவனமான KJR ஸ்டூடியோஸும் 'இனிமேல் ராதாரவி அவர்களுக்கு எங்கள் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வழங்கப்பட மாட்டாது' என அதிரடியாக அறிவித்தது.

மேலும் பல நிறுவனங்களும் இதே முடிவை எடுக்க தயாராகி வரும் நிலையில், அவர் உறுப்பினராக உள்ள திமுக அரசியல் கட்சியும் அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.

இது குறித்து சமீபத்தில் வெளியான தகவலின் படி, பெண்களை தரக்குறைவாக பேசி கட்சி பெயருக்கு களங்கம் விளைவித்த காரணத்தினால் ராதாரவி அவர்கள் கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்யப்படுவதாகஅறிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.