Ad Code

Responsive Advertisement

"நயன்தாரா விவகாரம்" இனிமேல் படவாய்ப்புகள் கிடையாது...! வாயால் கெட்ட ராதாரவி


நடிகர் ராதாரவி மேடைகளில் நடிகைகள் குறித்து கீழ்த்தரமாக பேசிவந்த நிலையில், நயன்தாரா குறித்து பேசி இருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

இதுவரை அவரது பேச்சை கேட்டுக்கொண்டு பொறுமையாக இருந்தவர்களும் நயன்தாரா சம்பவத்திற்கு பிறகு அமைதி காப்பதாக இல்லை என தங்களது கண்டனங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர்.

ரசிகர்கள், பிரபலங்கள் என பலதரப்பட்ட மக்களிடையே நயன்தாராவுக்கு ஆதரவும், ராதாரவி அவர்களின் செயலுக்கு கண்டனமும் கிளம்பி வரும் நிலையில், அதிரடி அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறது பிரபல KJR ஸ்டூடியோஸ் தயாரிப்பு நிறுவனம்.

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், வரலாற்று சிறப்பு மிக்க திரைத்துறை குடும்பத்தில் இருந்து வந்துவிட்டு, சக நடிகை குறித்து ராதாரவி பேசியதை ஏற்றுக்கொள்ள முடியாது. மரியாதை என்ற பெயரில் அவர் சொல்வதை எல்லாம் கேட்டு கைதட்டியவர்களை என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

வெறும் கைத்தட்டல்களுக்காக நீங்கள் பேச விரும்பினால், உங்களுக்கு ஏற்ற பரிட்சயமான ஒரு இடம் இருக்கிறது அங்கே போய் இப்படி பேசுங்கள். நடிகர் சங்கம் இந்த பதிவை பார்த்திருக்கும் என நம்புகிறோம். இனிமேல் எங்கள் படங்களில் ராதாரவி அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்குவதாக இல்லை. இதையே பிற திரைத்துறை பிரபலங்களையும் கடைபிடிக்க வேண்டுகோள் விடுக்கிறோம் என அதிரடியாக தெரிவித்து இருக்கின்றனர்.