Ad Code

Responsive Advertisement

'மிகப்பெரும் தொகையோடு சிக்கிய 'புஸ்பவனம் குப்புசாமி'... தேர்தல் ஆணையத்தின் அலப்பறை


வருகிற லோக்சபா தேர்தலை ஒட்டி, கோடிகோடியாக பணம் பட்டுவாடா நடைபெற்று வரும் நிலையில், அவர்களை எல்லாம் விட்டுவிட்டு சிறு குறு தொழிலாளர்களை மடக்கி பிடித்து வருகிறது தேர்தல் ஆணையம்.

 வாக்களிக்க பணம் வழங்கும் முறை, நாடு முழுவதும் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் நிலையில், அதனை தடுக்க தேர்தல் ஆணைய அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒருபுறம் அத்தேர்தல் அதிகாரிகளே, ஆம்னி பேருந்தில் கடத்தப்படும் பணத்திற்கு பாதுகாப்பாக செல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், சிறு குறு தொழிலாளிகளிடம் மட்டும் சட்டம் தன் கடமையை செய்து வருகிறது.

இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் இத்தகைய அலப்பறையில் சிக்கி தவித்து இருக்கிறார் பிரபல நாட்டுப்புற பாடகரான புஸ்பவனம் குப்புசாமி. அண்மையில் கோவில் திருவிழா ஒன்றின் மேடை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், ஊதியமாக பெற்ற 50,000 ரூபாயுடன் பயணம் செய்திருக்கிறார்.

அப்பொழுது வழிமறித்து சோதனை செய்த அதிகாரிகள், அப்பணத்திற்கு கணக்கு காட்டுமாறு வலியுறுத்த வேறுவழியின்றி, கோவில் நிர்வாகத்தினரை அழைத்துவந்து பேசி அவர்களிடம் இருந்து விடுபட்டு சென்றிருக்கிறார்.