Ad Code

Responsive Advertisement

அதிகம் தேடப்பட்ட 'பொள்ளாச்சி ஆபாச வீடியோ'.. கூகிளை தெறிக்க விடும் நெட்டிசன்கள்


நாட்டில் ஒரு பிரச்சனை பெரிய அளவில் வெடிக்கும் போது அது பற்றின இணையதள தேடல்களும் அதிக அளவில் இருக்கும். அந்த வகையில் சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்து பலரையும் ஈரக்குலை நடுங்க செய்த பொள்ளாச்சி கற்பழிப்பு சம்பவமும், அதன் வீடியோக்களும் அதிக அளவில் தேடப்பட்டு வருகிறது.

பொள்ளாச்சியை சேர்ந்த அரசியல் பின்புலம் கொண்ட நபர்கள் சிலர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் தொடர்பு கொண்டு, இளம் பெண்களுடன் நட்பு பாராட்டி பின்பு தங்களது பாலியல் இச்சைகளுக்கு பயன்படுத்தியது தொடர்பான தகவல்கள், பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பெயரில் வெளிச்சத்திற்கு வந்தது.

சுமார் 100க்கும் மேலான பெண்களின் 250க்கும் மேற்பட்ட வீடியோக்கள் அடங்கிய செல்போன் சிக்கி இருந்ததை தொடர்ந்து, அதில் ஒரு சில வீடியோக்களை பிரபல நக்கீரன் பத்திரிகை வெளியிட்டது.

அதனை தொடர்ந்து, குறிப்பிட்ட வீடியோக்களுக்கான தேடல் இணையதளங்களிலும், ஆபாச வலைத்தளங்களிலும் அதிக அளவில் அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் வீடியோவுக்கான லட்சக்கணக்கான தேடல்கள் கூகிள் வலைதளத்தில் பதிவாகி இருந்த நிலையில், இப்படியொரு பிரச்சனையிலும் ஆபாச வீடியோக்களை தேடி அலையும் மனம் படைத்தவர்களை என்னவென்று சொல்வதென தெரியவில்லை.