Ad Code

Responsive Advertisement

அனைவரையும் சிரிக்க வைத்த 'பிலிப்ஸ்' வாழ்வில் இவ்வளவு சோகமா?

நன்றி : Simple Dhaa யூட்யூப் சேனல் 
சமூக வலைத்தளங்கள் மூலம் ஓவர் நைட்டில் உலக பிரபலம் அடைந்தவர்களில் ஒருவர்தான் பிலிப்ஸ். குடித்து விட்டு நண்பர் ஒருவருடன் இவர் சண்டை போடும் காணொளி, சினிமாவை மிஞ்சும் அளவிற்கு காமெடியில் கலக்க ஒட்டுமொத்த இணையவாசிகளையும் கவர்ந்தார் பிலிப்ஸ்.

அதனை தொடர்ந்து, டிக்டாக், யூட்யூப் என இவர் பேசிய வசனங்களை பேசி பலரும் லைக்ஸ், கமெண்டுகளை அள்ளினர். இவருக்கு பிலிப்ஸ் ஆர்மி என்ற பெயரில் தனி ரசிகர் பட்டாளமும் உருவானது.   

இப்படி ஒரே வீடியோவில், ஒட்டுமொத்த தமிழர்களை சிரிக்க வைத்த பிலிப்ஸின் வாழ்வில் நிரம்பி இருப்பது என்னமோ சோகம் மட்டும்தான். திண்டுக்கல் மாவட்டம், மீன் மார்க்கெட் நிற்க கூட இடம் இல்லாத வீட்டில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார் பிலிப்ஸ்.

நன்றி : 'Simple Dhaa' யூட்யூப் சேனல் 
சிறிய வயது முதலே நாடக துறையில் இருந்து வரும் இவர், நடிப்பு மட்டுமல்லாது, கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் போன்றவற்றிலும் சிறந்த கலைஞர். சினிமாவில் ஜொலிக்க வேண்டும் என்ற ஆசையில் ஓரிரு திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருக்கும் இவர், இன்று அன்றாட பிழைப்புக்கே அல்லாடி வருகிறார்.

தற்பொழுது அந்த கலைகள் அழிந்து வரும் நிலையில், கல்யாண வீடுகளில் வாசிக்கும் பேண்ட் குழுவில் இணைந்து தனது வாழ்வை நகர்த்தி வருகிறார்.

 நாடக கலைஞர்களுக்காக அரசு வழங்கும் 1000 ரூபாய் மானியம் பெற, 8 மாதங்களாக படாத பாடு பட்டுவரும் இவரை கண்ட இளைஞர்கள் இவரை பற்றிய இந்த தகவல்களை வெளியிட்டு, பிலிப்ஸ்ன் மறுபக்கத்தையும் இவ்வுலகிற்கு தெரியப்படுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்